Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,204ஆக உயர்வு – சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இன்று காலை மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி ஊரடங்கு உத்தரவை மேலும் 19 நாட்கள் நீட்டித்து, மே 3ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவித்தார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் 10815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் 1,190 பேர் குணமடைந்து 353 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் அதிகளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் 28, 711 வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாகவும், 135 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளதாகவும், 68,  519 பேர் 28 நாள் கண்கணிப்பை முடித்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் 25 பரிசோதனை மையங்கள் உள்ளது என தெரிவித்த அவர் 16 அரசு ஆய்வு மையம்,  9 தனியார் ஆய்வு மையம் என்று தெரிவித்தார். 19,250 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு 1173ஆக இருந்த நிலையில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

Categories

Tech |