Categories
சென்னை மாநில செய்திகள்

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சிறுவனை விமான நிலைய மருத்துவக்குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுவனிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது புனேவில் இருந்து வெளிவந்த அறிக்கையின்படி சென்னை சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

மேலும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவரின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக அவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தற்போது உறுதியாகி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

Categories

Tech |