Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் தமிழகத்தில் 144 தடை ஏப்., 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்ய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது என கூறியுள்ளார். கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பதே மிக மிக முக்கியம் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக தமிழகத்தில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1500 லேப் டெக்னீசியன்ஸ் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாடு அறையை உடனே தொடர்பு கொள்ள வேண்டும் 144 தடை உத்தரவு மக்களையும், நாட்டையும் பாதிகாப்பதற்கே என்பதால் 144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Categories

Tech |