Categories
சற்றுமுன் திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST NOW : தென்காசியை சேர்ந்த நபருக்கு கொரோனா அறிகுறி ?

தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஒருவர் இருப்பதாக அறிகுறி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. துபாயில் இருந்து திரும்பிய 27 வயதான இளைஞருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இளைஞரின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |