நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சுமார் 3,000 செவிலியர்கள் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொரோனா பிரிவில் பணியாற்ற சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 48,019த்தை தாண்டியுள்ளது. மேலும் அதிகபட்சமாக சென்னை மாநகரம் தான் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மாநகராட்சியில் அதிகபட்சமாக ராயபுரம் – 5,486, கோடம்பாக்கம் – 3,648, திரு.வி.க நகரில் – 3,041, அண்ணா நகர் – 3,431, தேனாம்பேட்டை – 4,143, தண்டையார் பேட்டை – 4,370, வளசரவாக்கம் – 1,444, அடையாறு – 1,931, திருவொற்றியூர் – 1,258, மாதவரம் – 922, பெருங்குடி – 646, சோளிங்கநல்லூர் – 639, ஆலந்தூர் – 699, அம்பத்தூர் – 1,190, மணலி – 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை முழுவதும் 4 அரசு மருத்துவமனைகளில் 1,000திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பல்வேறு மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர். இந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் 3,000திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மேலும் 3,000 செவிலியர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளன.