Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்! 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர்களும், கோவையில் 127 பேர்களும், திருப்பூரில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 66 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 

1. சென்னை – 228
2. கோயம்புத்தூர் – 127
3. திருப்பூர் – 80
4. ஈரோடு – 70
5. திண்டுக்கல்  – 66
6. திருநெல்வேலி – 58
7. செங்கல்பட்டு – 50
8. நாமக்கல் – 50
9. திருச்சி – 46
10. திருவள்ளூர் – 46
11. மதுரை –  44
12. தேனி – 43
13. கரூர் – 42
14. நாகப்பட்டினம் – 40
15. ராணிப்பேட்டை – 39
16. தஞ்சாவூர் – 35
17. தூத்துக்குடி – 26
18. விழுப்புரம் – 26
19. சேலம் – 24
20. திருவாரூர் – 21
21. கடலூர் – 20
22. வேலூர் – 22
23. திருப்பத்தூர் – 17
24. விருதுநகர் – 17
25. கன்னியாகுமரி – 16
26. தென்காசி – 14
27. திருவண்ணாமலை – 12
28. சிவகங்கை – 11
29. ராமநாதபுரம் – 10
30. நீலகிரி – 9
31. காஞ்சிபுரம் – 8
32. கள்ளக்குறிச்சி – 3
33. அரியலூர் – 1
34. பெரம்பலூர் – 1

மொத்தம் – 1,323.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |