Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா – மேலும் ஊரடங்கு நீட்டிப்பா ?

குஜராத்தில புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஊரடங்கு நீடிக்குமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு  இதுவரை நாடு முழுவதும் 527 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்ற நிலையில் மகராஷ்டிராவில் 3,648 பேருக்கும், டெல்லியில் 1,893 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் 1,402 பேருக்கும், தமிழகத்தில் 1,372 பேருக்கும் கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று குஜராத்தில் ஒரே நாளில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1604 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 30ஆவது நாளை நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில் ஒரே நாளில் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவின் கொடூர தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதை உணர்த்துகின்றது.

பிற மாநிலங்களில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும் குஜராத்தில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது ஊரடங்கை நீட்டிக்க வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஒருவேளை கொரோனா குறையாமல் இதே போல அடுத்தடுத்து 200 , 100 என்ற எண்ணிக்கையில் அடுத்தடுத்து ஏனைய மாநிலங்களில் பதிவாகும் பட்சத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் மே 3ஆம் தேதிக்குள் கொரோனவை கட்டுப்படுத்தவேண்டிய தேவை மருத்துவ துறைக்கு உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Categories

Tech |