Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த மருத்துவமனை டீனுக்கே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 முதியவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |