Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கொரோனா பீதி : தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்…..!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி  , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பயோமெட்ரிக்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியில் தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு என்பது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த வாரத்திலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மத்திய அரசு பணியாளர்களுக்கு இப்படியான ஒரு அறிவுறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக பள்ளிக்கல்வித் துறையிலும் பயோ மெட்ரிக்முறையை பயன்படுத்த வேண்டாமென்று அறிவுறுத்தப்படுள்ளது.

தமிழகத்தில் பயோமெட்ரிக் முறை எந்தெந்த வகையிலெல்லாம் இருக்கிறதோ , ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. தனியார் பள்ளிகள் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கல்வித் துறை அலுவலகங்கள் என பயோமெட்ரிக் முறை எப்படி இருந்தாலும் மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக வருகை பதிவேடு மூலமாக வருகை பதிவேடு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |