கொரோனாவின் தாக்கத்தால் தலைவி பட ரிலீசை படக்குழு தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஏஎல் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.
மேலும் சமுத்திரக்கனி பூர்ணா மதுபாலா பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வீசி வருவதால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் தலைவி படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்புகள் குறைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிய பின் தலைவி படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.