தூத்துக்குடி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் தலா 15 பேர் என மொத்தம் 30 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பிய 15 பேரையும் கடம்பூர் ராஜு மற்றும் மருத்துவர்கள் பழங்கள் கொடுத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று வரை 306 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 168 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 136 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 483 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 294 பேர் டிஸ்சார்ஜி செய்யப்பட்டுள்ளனர். தற்போது 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 28,694 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15,762ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.93% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் தினமும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.