தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
10வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 919, செங்கல்பட்டில் 88, திருவள்ளூரில் 52, காஞ்சிபுரத்தில் 47, திருவண்ணாமலையில் 65 என 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உள்ளதா? என 19,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இன்று தான் அதிகம். இதையடுத்து இதுவரை தமிழகம் முழுவதும் 7,48,244 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.