Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 155 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு..!!

சென்னையில் கடந்த 2 மாதங்களில், கொரோனா பாதித்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 50 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 45 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 30 செவிலியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனா பாதித்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் 135 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவக்கூடிய நிலையில், முன்களப்பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சென்னையில் தொற்று மிகவும் அதிகமாக பரவிவருகிறது. இந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமத்தூரர் மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |