தஞ்சையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அம்மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் இடம் பிடித்துள்ளது…
தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது என்றார். மேலும் நற்செய்தியாக ஒரேநாளில் 62 பேர் குணமடைந்தனர் என்றார். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118ல் இருந்து 180 ஆக அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ல் இருந்து 1,323 ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 பேர் பலியான நிலையில், இன்று ஒரேநாளில் 102 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளது.. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 180ல் இருந்து 283 ஆக உயர்ந்த செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது..
தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 56 பேரில் அதிகபட்சமாக தஞ்சையில் 17, சென்னையில் 11, தென்காசி மற்றும் திருவள்ளூரில் தலா 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இன்று தஞ்சையில் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்ததால் மொத்த பாதிப்பு 18ல் இருந்து 35 ஆக அதிகரித்துள்ளது… இதனால் ஆரஞ்சு நிறத்தில் இருந்த தஞ்சை ரெட்டாக மாறியது. 22க்கும் மேற்பட்ட பாதிப்பு இருக்கும் மாவட்டங்கள் சிவப்பு நிற பட்டியலில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது…