திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் மற்றும் செவிலியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,917ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 3,000-ஐ நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் நேற்றைய நிலவரப்படி 2,826ஆக உள்ளது. அதில் 1,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1312 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த 44 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.