Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 221 ஆக அதிகரிப்பு..!

சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகம் அதை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் நேற்று வரை 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

இதேபோல கோயம்பேடு பகுதிக்கு நெருக்கமாக உள்ள பகுதியான நெற்குன்றம், சின்மயா நகர், மதுரவாயல் போன்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கோயம்பேடு பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் இருமடங்கில் பணியில் அமர்த்தப்பட்டு பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இன்றும் கொரோனா எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Categories

Tech |