Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 371 பேர் கொரோனாவால் பாதிப்பு!

கோயம்பேடு சந்தையில் இருந்து தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 371ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 1,724 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் இருந்து சென்ற வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடலூரில் சுமார் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோயம்பேட்டில் இருந்து வந்துள்ள நிலையில் 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூரில் கோயம்பேடு சென்று திரும்பிய 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 20 பேருக்கும், தஞ்சை மாவட்டத்தில் ஒருவர் என இதுவரை 371 பேருக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக பாதிப்புகளுடம் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ளதால் மற்ற மாவட்டங்களில் சென்னையில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Categories

Tech |