செங்கல்பட்டில் இன்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 46 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 779ஆக இருந்த நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு 824ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை 253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 518 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என பலருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகி வருகிறது. அதேபோல பல்வேறு மாநிலங்களில் இருந்து செங்கல்பட்டு திரும்பியவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.