Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 4,882 ஆக உயர்வு!!

சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஆண்கள் 427 பேர், பெண்கள் 288 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 திருநங்கைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,848 ஆண்கள், 2,867 பெண்கள், 3 திருநங்கைகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 83 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,134 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில், 10 வயதிற்கு உட்பட்ட 35 சிறுவர்களுக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நெற்குன்றம் வள்ளியம்மை நகரில் 2 மாதக் குழந்தை, சூளை ஏபி சாலையில் 7 மாத குழந்தைக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 60 வயதை கடந்த 39 பேருக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |