இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17,974 பேரும், குஜராத்தில் 7,012 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து டெல்லியில் 5,980 பேரும், தமிழகத்தில் 5,409 பேரும், ராஜஸ்தானில் 3,427 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,252 பேரும், உத்தரபிரதேசத்தில் 3,071 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 694 பேரும், குஜராத்தில் 425 பேரும், மத்திய பிரதேசத்தில் 193 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
மேற்குவங்கத்தில் 151 பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 16,540 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 45வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன.
இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதாக மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுடிருந்தது. அதன்படி மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. மேலும், நாட்டில் உள்ள பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மாவட்டங்களில் என்னென்ன ஊரடங்கு தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்பதையும் மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.