Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு…மொத்த எண்ணிக்கை 1,154 ஆக அதிகரிப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,154 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 1,095 ஆக அதிகரித்திருந்தது. மேலும், நேற்று வரை கொரோனா பாதித்த 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் அம்மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 547 ல் இருந்து தற்போது 606 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது வரை கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது. சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல, நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த 4 மாவட்டங்களில் அதிகம் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்று 2வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த 12 நாட்கள் முழு ஊரடங்கு முடிவதற்குள் கொரோனா கட்டுக்குள் வருமா? என்று எதிர்பார்ப்பும் கேள்வியும் மக்கள் மனதில் எழுந்த வண்ணம் உள்ளன.

 

Categories

Tech |