சென்னையில் மட்டும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,500யை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கோயம்பேடு சந்தை மூலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கொரோனா பரவியது. 10 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500 தாண்டி இருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 500 க்கும் கீழ் சென்றது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் 500க்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 639 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 482 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு மட்டும் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6750ஆக உயர்ந்துள்ளது.