Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள், 241 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

12 வயது முதல் 60 வயதுகுட்பட்ட 9,749 பேருக்கு, 0 வயதுக்கு மேல் 812 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,26,720 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 13,081 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 58லிருந்து 61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 39 அரசு மற்றும் 22 தனியார் மையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது 6,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 7,343 ஆண்கள் மற்றும் 3,878 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |