இந்தியாவில் 85 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் 3,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 103 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,940 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 53வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. மேலும் உலகளவில் சீனாவை விட ஒரு படி முன்னேறி பாதிப்பு பட்டியலில் இந்தியா 10 இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு 4.0 குறித்து மே 18ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 29,100 பேரும், தமிழகத்தில் 10,108 பேரும், குஜராத்தில் 9,931 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 8,895 பேரும், ராஜஸ்தானில் 4,727 பேரும், மத்திய பிரதேசத்தில் 4,595 பேரும், உத்தரபிரதேசத்தில் 4,057 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகளின் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.
மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,752 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,068 பேரும், குஜராத்தில் 606 பேரும், மத்திய பிரதேசத்தில் 239 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் மேற்குவங்கத்தில் 225 பேர், ராஜஸ்தானில் 125 பேர் கொரோனாவால் இதுவரை பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 30,153 ஆக அதிகரித்துள்ளது.