Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு : ”நிதியுதவி அளியுங்கள்” முதல்வர் வேண்டுகோள் …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலவர் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு என்பது அமலில் இருக்கிறது. இந்த நிலையில் ஏழை எளிய மக்களை கொரோனா தொற்றில் இருந்து விடுவிக்கவும், தமிழகத்தில் தீவிரமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி மனமுவந்து தங்கள் பங்களிப்பினை பொதுமக்கள் அளிக்கலாம் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் வைத்துள்ளார்.

இதற்க்கு வருமான வரி சட்டம் பிரிவு  80(G )யின் கீழ் 100% வரி விலக்கு உண்டு என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முதல்வரிடமோ,  அரசு அலுவலர்களிடமோ நன்கொடையை நேரடியாக வழங்குவதை ஊக்குவிக்க இயலாது. எனினும் 10 லட்சத்திற்கு மேல் நிதி தருபவரின் விபரங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 

நம்பர் : 117201000000070

IFSC : IOBA0001172இல் நிதி உதவி அளிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |