மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் வாகன சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் வாகன சேவையை தொடக்கி வைத்து, செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு துறை, சென்னை மாநகராட்சி அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் நின்று போராடி செய்து கொண்டு வருவது எல்லோரும் அறிந்ததே.
சென்னைக்கு மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம், செவிலியர்கள் நியமனம் செய்து, படுக்கை வசதியை அதிகரித்துக்கொண்டே வருகின்றோம். 9,646 பணியாளரை முதலில் நியமனம் செய்தோம். 2,834 பேரை இரண்டாவது முறையாக பணி நியமனம் செய்துள்ளோம். இரண்டு நாட்களாக எல்லாம் மருத்துவமனைக்கும் 40 பேர், 60 பேர் என ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் பணியில் சேர்ந்து பணி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த மாதிரியான ஒரு பேரிடர் காலத்தில் ஆர்வத்தோடு, மனமுவந்து களத்தில் வந்து பணி செய்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலாக செவிலியர்கள் நியமனம் அவசியமான ஒன்று. அதனால்தான் இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று 2000 செவிலியர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்க்கு மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 4,893 செவிலியர்கள் தமிழ்நாடு முழுவதும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைக்கு கூடுதலாக 2000 செவிலியர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவங்க உடனே பணியில் சேர்க்கிறார்கள். சென்னையில் உள்ள ஐந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனைகளில் தலா 400 பேர் என்று பணி செய்வார்கள். படுக்கை வசதிகளை உயர்த்தி தேவையான மனித வளத்தையும் உயர்த்துகின்றோம்.
தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய பொது சுகாதாரத்தில் பல்வேறு நடமாடும் மருத்துவக் குழுக்கள், பள்ளி சிறார்களுக்கான மருத்துவ குழுக்கள் என ஏற்கெனவே 200 புதிய ஆம்புலன்ஸ் கொடுத்துள்ளோம். அதுல சென்னையில் மட்டும் 72 ஆம்புலன்சை வழங்கியுள்ளோம். அந்த ஆம்புலன்ஸ்ஸிற்கு பிரத்தியோகமான எண் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் யாருக்காவது பாசிட்டிவ் வந்தால் இந்த பிரத்யேக எண்ணுக்கு அழைத்தால் நோயாளியை இடம் மாற்றுவோம். 500க்கும் மேற்பட்ட கால்கள் அந்த பிரத்தியேக எண்ணுக்கு வந்து கொண்டிருக்கின்றது.
இன்றைக்கு 254 வாகனங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஸ்டாப், மருந்து மாத்திரைகளோடு சென்னை மாநகராட்சிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. உள்ள ஒரு நாலு ஷேர் இருக்கும், டேபிள் இருக்கும். அவர்கள் நேராக பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்வார்கள். அதே போல எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் செல்வார்கள். சென்னையில் எத்தனை சந்து, என்னனை தெருக்கள் இருக்கிறதோ அந்த எல்லா இடங்களிலும் போய், அவுங்க ஒரு டேபில், 4 சேர் போட்டு டாக்டர், ஸ்டாப் நர்ஸ், ஃபார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன் பாரா மெடிக்கல் ஸ்டாப் எல்லாரும் உக்காந்து இருப்பாங்க. அவர்களிடம் மருந்து, மாத்திரைகள் எல்லாம் கொடுத்துள்ளோம்.
எந்த கேஷையும் மிஸ் பண்ண முடியாது. ஒரு கேஸ்ஸை மிஸ் பண்ண வாய்ப்பே கிடையாது. அப்படி நேராக, களத்தில் வீடு தேடி போறாங்க. எங்கேயுமே இப்படி நடப்பதில்லை, அவ்வளவு பிரமாதமாக சென்னை மாநகராட்சியில் நடக்குது. 254 மருத்துவ நடமாடும் வாகனத்தை வைத்து ஒரு மிகப்பெரிய வலுவை உருவாக்கி இருக்கிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் கொரோனவை கட்டுபடுத்த தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.