விழுப்புரம் மாவட்டத்தில் 93 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பெண்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 293ஆக உள்ளது. இதில் 272 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 43 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட 293 பேரில் கோயம்பேட்டில் இருந்து வந்த 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 443 பேர் நான்கு மையங்களில் தனிமைப்படுத்தியுள்ளனர். 978 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் 93 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு சுகாதர பணியாளர்கள், வருவாய் துறையினரின் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.