Categories
மாநில செய்திகள்

இதுவரை பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு கொரோனா உறுதி: சுகாதாரத்துறை!!

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு இதுவரை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 805 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் “செய்ப்பட்டுள்ளனர்.

இன்று வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த 93 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 87 பேர், குஜராத்தில் இருந்த வந்த 3 பேருக்கும், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவருக்கும், கேரளாவில் இருந்து வந்த 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், ரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளவர்கள் மருந்துகளை சரியான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நோய்தொற்று வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறியுள்ளார்.

Categories

Tech |