தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை 309ஆக உள்ள நிலையில் நேற்று 75 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்த 309பேரில், மொத்தமாக 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என கூறப்பட்டது. டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லீக் ஜமாத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து 1,103 பேர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஏராளமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோவால் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 1580 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகவும், 484 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதாக தகவல் அளித்துள்ளனர். இதுவரை 2,10,538 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், 23,689 பேர் தனிமை வார்டுகளில் உள்ளதாகவும், 3,396வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.