காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,693 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாதிப்பிகள் 1580 ஆக இருந்தது. அதில், நேற்றுவரை 733 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 829 பேர் இருந்த நிலையில் தற்போது 942 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை காஞ்சிபுரத்தில் கொரோனாவுக்கு 18 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 9வது நாளாக முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில், 7 நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிகளிலும் 55 ஊராட்சிகள் உள்ளடங்கும். அதில் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.