புதுச்சேரியில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு 215 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி பிள்ளையார்குப்பம், கோரிமேடு, வைத்திக்குப்பம், காரைக்காலை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் புதுச்சேரியில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 202ஆக உயர்ந்தது.
மேலும் நேற்று வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக இருந்த நிலையில் இன்று 102 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை 91 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று 104 ஆக அதிர்க்கரித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.