Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 133 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு..!

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று, அஜ்மீரில் 44, ஜெய்ப்பூரில் 66, பரத்பூரில், தயுசா மற்றும் சவாய் மாதோபூரில் தலா 1, ஜோத்பூரில் 3, கோட்டாவில் 6, நாகூரில் 4, டோங்கில் 7 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது. அதில் இதுவரை 328 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

அதேபோல் சுமார் 27 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 5218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 2,178 பேரும், டெல்லியில் 2,156 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 1,596 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 1,552 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3,869 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று ராஜஸ்தானில் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |