கேரளாவில் இன்று ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கேரள மாநிலத்தில் 3,170 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். மீதமுள்ள 43 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
மேலும், இன்று கொரோனாவில் இருந்து 93 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,659 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் தற்போது வரை 1,490 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,43,969 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2,050 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 5,239 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் கொல்லம் மற்றும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மொத்தம் 7 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது வரை கேரளாவில் 109 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.