Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா உறுதி என வெளியாகும் தகவலால் பரபரப்பு..!!

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா உறுதி எனும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக பெரும் அதிர்ச்சியும், பரப்பும் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அம்மாவட்டத்தில் 224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அதில், தேனியில் 138 பேருக்கும், போடிநாயகனுரில் 21 பேருக்கும், பெரியகுளம் பகுதியில் 65 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5,00க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை தேனி மாவட்டத்தில் 284 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் 129 பேர் குணமடைந்துள்ள நிலையில், 153 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இதுவரை 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு முழுஉரடங்கு அமலாகும் அறிவிப்பை வெளியிட்ட பிறகு இன்று காலை முதல் தேனியின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில் இதுபோன்ற தகவல்கள் வெளியாவதால் பரபரப்பு சூழல் நிலவியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் அறிக்கையில் தெரியவரும்.

Categories

Tech |