Categories
தேசிய செய்திகள்

மகாரஷ்டிராவில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா உறுதி: மும்பையில் மட்டும் 187 பேர் பாதிப்பு!

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 283 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11 மணி நிலவரப்படி 283 பேருக்கு பாதிப்பு இருப்பதும், அதில் மும்பையில் மட்டும் 187 பேருக்கு கொரோனா இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை அம்மாநிலத்தில் 4,483 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வெளியான தகவலின் படி, இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17, 656 ஆக உயர்ந்துள்ளது.

அதில், 14,255 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,842 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.

இன்று, தமிழகத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 283 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |