Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தில் உள்ள பெண் (32), 25 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள காய்கறி சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்று திரும்பிய வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்துள்ள 4 பெரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் நேற்றுவரை அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்திருந்தது. மேலும் இதுவரை 202 பேர் குணமடைந்த நிலையில் 72 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |