புதுச்சேரி மாஹேவில் மூதாட்டி ஒருவருக்கு கொரானா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் மூலம் மாஹே வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரானா அறிகுறி இருந்த நிலையில் மாஹே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூதாட்டியின் ரத்த மாதிரி கோழிகோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை செய்ததில் கொரானா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரானா உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் மூதாட்டி தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.