திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய 2 மலைப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை மூட தேவஸ்தானம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் அளித்துள்ளனர். அரசு உத்தரவு கிடைத்தவுடன் ஒரு சில மணி நேரங்களில் ழுமலையான் கோயிலை மூட முடிவு செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கோயிலிலை மூடுவது தொடர்பாக ஆந்திர அரசு அதிகாரிகளுடன் தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது. பக்தர்கள் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களை அனுமதிக்காமல் அர்ச்சகர்கள் மட்டும் ஆறு கால பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 168பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.