Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சம் : ”லக்னோவில் இறைச்சிக்கு தடை” உ.பி அரசு அதிரடி …!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் திறந்தவெளியில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 28 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கொரோனா பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த சுற்றைக்கை அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் மீன்கள் , பாதி வேகவைத்த இறைச்சிகள் , திறந்தவெளி இறைச்சி கடை ஆகியவை விற்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இறைச்சி மூலமாக கொரோனா பரவும் என்ற அச்சத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகின்றது.

Categories

Tech |