இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 157 பேர் குணமடைந்துள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. உலகமெங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2069 இலிருந்து 2301 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடெங்கும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 இல் இருந்து 56 ஆக அதிகரித்திருக்கிறது. சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய தகவலாக கொரோனாவில் இருந்து 157 பேர் குணம் அடைந்திருக்கின்றனர்.தமிழகத்தை பொருத்தவரை தற்போது வரை 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.