Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 67,648 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,744 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 91 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை – 1,654, திருவள்ளூர் – 87, செங்கல்பட்டு – 131, மதுரை – 97, திருவண்ணாமலை – 54, காஞ்சிபுரம் – 66, நாகப்பட்டினம் – 2, கோவை – 22, அரியலூர் – 8, கடலூர் – 41, தருமபுரி – 1, திண்டுக்கல் – 13, ஈரோடு – 4, கள்ளக்குறிச்சி – 18, கன்னியாகுமரி – 22, கரூர் – 9, கிருஷ்ணகிரி – 3, நாமக்கல் – 1, நீலகிரி – 2, பெரம்பலூர் – 5, ராணிப்பேட்டை – 2, புதுக்கோட்டை – 13, ராமநாதபுரம் – 1, சேலம் – 55, சிவகங்கை – 15, தென்காசி -5, தேனி – 81, தஞ்சை – 15, திருப்பத்தூர் – 11, திருவாரூர் – 31,தூத்துக்குடி – 49, நெல்லை – 32, திருச்சி – 76, வேலூர் – 51, விருதுநகர் – 40, விழுப்புரம் – 34 பேரும், திருப்பூர் – ஒருவரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 28,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 32,079 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 9,30,367 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |