Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 639 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 6000யை தாண்டியது …!!

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11யை தாண்டியுள்ளது.

தமிழகத்தின் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 10 நாட்களாக தினமும் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அதன் தாக்கம் 500க்கும் கீழ் சென்ற நிலையில் இன்று ஒரே நாளில் 639 பேர் பாதிப்பு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது 11, 224 என்ற அளவில் இருக்கின்றது. அதிகபட்சமாக சென்னையில் 482 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அதன் எண்ணிக்கை 6750ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 434 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 4,172ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 78ஆக உள்ளது.

Categories

Tech |