Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயளாலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறும் போது, தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 127 பேர் அரசு கண்காணிப்பில் இருக்கின்றனர். கொரோனா பாதித்த 8 பேர் குணமடைந்துள்ளனர் 90824 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |