Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா.. பாதிப்புகள் 300-ஐ தாண்டியது!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரங்கிமலையில் – 44, கூடுவாஞ்சேரியில் -23, கேளம்பாக்கத்தில் – 6, அச்சிறுப்பாக்கத்தில் – 4, செங்கல்பட்டில் – 3 பேர் உட்பட மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 267 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர்.

மேலும் கோயம்பேடு சந்தை சென்று காய்கறிகள் வாங்கி வந்த கடை வியாபாரிகளும் அடங்குவர்.  நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 56 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை கொரோனவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது 297 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று வரை 7,204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 1,959 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை சிகிச்சையில் 5,195 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Categories

Tech |