Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம் : நாடு முழுவதும் 168 ரயில் ரத்து …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 168 ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளை திறக்க கூடாது. மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் , மால்கள் ,சுற்றுலாத் தளங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கு வகையில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் 160 ரயில்களை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களை பொறுத்தவரை தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் ரயில்களாகத்தான் இருக்கின்றது. குறிப்பாக சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்காக இருக்கும் ரயில் , ராஜ்தானி போன்ற சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டிருந்த ரயில்கள் டிக்கெட்டுகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறன.

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ஓடக்கூடிய ரயில்களில் 20 சதவீதமான சீட்டுகள் மட்டுமே நிரம்பி இருக்கக் கூடிய நிலையில் ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரக்கூடிய நாட்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தேவையில்லாமல் குறைந்த அளவிலான பயணிகள் ஒன்று கூடுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  168 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் இயங்கும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |