கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மதுரையில் நாளை நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை ஞாயிற்றுக்கிழமை சிறு சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் , முடிந்த அளவு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் நிலையில் தமிழக அரசும் இதற்க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது. அந்தவகையில் திட்டமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் நாளை நடைபெற இருந்த 24 திருமணங்கள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை திருமண மண்டபங்கள் உறுதி செய்துள்ளது. அனைத்து திருமணமும் வீட்டுக்காரர் தாங்களாகவே முன்வந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இது மிகுந் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் தான் இருக்கின்றது.