தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கவில்லை. ஈரோட்டில் கடந்த 31 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை. திருப்பூரில் 15 நாட்கள், கோவையில் 13 நாட்கள், சேலத்தில் 10 நாட்கள், திருவாரூரில் 10 நாட்கள், நாமக்கலில் 7 நாட்கள் யாரும் கொரோனோவால் பாதிக்கபடவில்லை.
மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திருச்சி, அரியலூர், ராமநாதபுரம், கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக புதிதாக ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.