இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,579,894 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 705,093 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 79 ஆயிரத்து 059 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 45,355 பேரும், ஸ்பெயினில் 21,717 பேரும் உயிரிழந்துள்ளார். ஸ்பெயினில் மட்டும் இன்று 435 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் 24,648 பேரும், பிரான்ஸ் நாட்டில் 20,796 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இதுவரை 82,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,632 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.