தமிழகத்தில் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவில் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை 349ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15க்கும் மேற்பட்டதாகவே உள்ளது. இறப்பு விகிதம் 0.90% ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்து 38,716 ஆக அதிகரித்துள்ளது.