வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை வேலூர் மாவட்டத்தில் 389 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை வேலூரில் 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுவரை 283 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று 292 ஆக அதிகரித்துள்ளது.